குறும்புத்தனமாக குளிர்சாதனப்பெட்டிக்குள் உட்கார்ந்த குழந்தை : சிக்கலுக்கு ஆளான தந்தை!!

490

Baby

தைவானில் 2 வயது குழந்தையின் குறும்பால் அக்குழந்தையின் தந்தை சட்ட சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

Qingshui மாவட்டத்தில் கடை நடத்தி வரும் நபர் Huang, குளிர்பானங்களை வைப்பதற்காக இரண்டு குளிர்சாதனப்பெட்டிகளை வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் இந்நபரின் மகன், அதில் ஒரு குளிர்சாதனப்பெட்டிக்குள் உள்ளே சென்று அமர்ந்து கொள்வதும், அதன் பின்னர் வெளியே வருவதும் என விளையாடிய வண்ணம் இருந்துள்ளான்.



தந்தை பலமுறை கண்டித்தும், அச்சிறுவன் தனது குறும்புதனத்தை நிறுத்தியபாடில்லை, இந்நிலையில் கடைக்கு வந்த இந்நபரின் நண்பன், குளிர்சாதனப்பெட்டிக்குள் இருக்கும் குழந்தையை புகைப்படம் எடுத்து, அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இக்குழந்தையை வளர்க்க முடியவில்லை, அதனால் ஏலத்திற்கு விடுவதற்கு முடிவுசெய்துள்ளேன் என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தினை பார்த்த சமூக வலைதளவாசிகள், இது குழந்தைகள் சித்ரவதை ஆகும், இக்குற்றத்திற்காக இந்நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்துள்ளனர்.

தைவான் Social Affairs Bureau – யின் படி குழந்தைகளை சித்ரவதை செய்வது நிரூபணமானால், குற்றவாளிக்கு £6,420 அபராதம் விதிக்கப்படும், இந்நிலையில் குளிர்சாதனப்பெட்டிக்குள் இருந்த இக்குழந்தையின் புகைப்படம் இந்த அமைப்பினை எட்டியதைத் தொடர்ந்து, அவர்கள் விசாரணை வளைத்திற்குள் Huang-யை உட்படுத்தியுள்ளனர்.

விசாரணையில், எனது குழந்தை மிகவும் அழகாக, குறும்புத்தனமாக இருக்கும், இதனை கவனித்த எனது நண்பன் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளான்.

நான் எனது குழந்தை மீது அதிக அன்பு கொண்டவன் என Huang கூறியதைத்தொடர்ந்து, இதனை உறுதிப்படுத்துவதற்காக அருகில் வசிப்பவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இந்த விவகாரம் கைவிடப்பட்டுள்ளது.