உண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல : உலகின் மிகக் குட்டையான தம்பதியர்!!(படங்கள்)

558

shortest-couple

மூன்று அடிக்கும் குறைவான உயரமுடைய, உலகின் மிகக் குட்டையான ஜோடி, உண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உயரக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலைச் சேர்ந்த பாலோ கப்ரியல் த சில்வா பரோஸ் மற்றும் கட்யுசியா ஹொஷினோ முறையே 34.8 மற்றும் 35.2 அங்குல உயரமுடையவர்கள்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் நம்பிக்கையிலுள்ள இவர்கள், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் அறிமுகமாகி MSN மெசஞ்சர் மூலம் அளவளாவத் தொடங்கியுள்ளனர்.



30 வயதான பாலோ, முதற் சந்திப்பிலேயே தனக்கு கட்யுசியா மீது அளவற்ற காதல் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், 26 வயதான கட்யுசியாவிற்கு அதே ஈடுபாடு பாலோ மீது ஏற்பட்டிருக்கவில்லை.

ஆரம்பத்தில் இருவருக்குள்ளும் சரியான புரிதல் இருந்திருக்கவில்லையென பாலோ குறிப்பிட்டுள்ளார். இதனால், கட்யுசியா பாலோவை தனது மெசஞ்சர் தளத்தில் தடை செய்துள்ளார். 18 மாதங்கள் கழித்தே பாலோவை மீண்டும் இணைத்துள்ளார்.

அதன் பிறகே பாலோ அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளார்.
நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக இவர்கள் சந்தித்துக்கொண்ட பிறகு சேர்ந்து வாழத் தீர்மானித்துள்ளனர்.

கட்யுசியா தனது உயரத்திற்கு தகுந்த மாதிரி அழகு நிலையம் ஒன்றை அமைத்து அதில் பணியாற்றி வருகிறார். பாலோ ஒரு சட்ட செயலாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

”அடிப்படையில் நாங்களும் ஒரு சாதாரணத் தம்பதியர் தான் என்றாலும் எங்களுடைய உயரம் தான் கொஞ்சம் குறைவு.
கட்யுசியா ஒரு சின்னப் போராளி, தோழமையும் நெருக்கமும் தான் எங்கள் உறவின் சிறப்பம்சம்,” என பாலோ தெரிவித்துள்ளார்.

”சாதாரணத் தம்பதியரைப் போலவே நாங்களும் போராடுகின்றோம். எங்களுடைய சிந்தனையும் உணர்வுகளும் ஒரே மாதிரியானவை. பாலோ புரிந்துணர்வுள்ள பொறுமையுள்ள மனிதர்,” என கட்யுசியா குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றாகவே பயணிக்கும் இவர்கள், பொது இடங்களில் ATM , கழிவறை பாவனைகளின் போது உயரக்குறைபாடு காரணமாக அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

வெளியில் செல்கையில் மக்களின் கேளிக்கைகளுக்கும் பாகுபாடுகளுக்கும் ஆளாவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

எல்லா வகையான இன்னல்களையும் கடந்த 8 ஆண்டுகளாக சேர்ந்தே கடந்துவிட்ட இவ்விருவரும் திருமண பந்தத்தில் இணையத் தீர்மானித்துள்ளனர்.

குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு கட்யுசியாவின் உயரம் பெரும் தடையாக இருக்கும் என்ற போதும் சொந்த வீடு, வழமையான எதிர்காலம் என்ற கனவுகளுடன் இருவரும் இணைகின்றனர்.

11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24