17 வயது சீனப்பெண்ணுக்கு 4 சிறுநீரகங்கள்!!

515

Kidney

சீனாவில் 17 வயது இளம்பெண் ஒருவரின் உடலில் 4 சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சியோலின் என்ற குறித்த பெண்ணுக்கு பிறந்ததிலிருந்தே 4 சிறுநீரகங்கள் இருந்துள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதுவரை அவருக்குப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சிலகாலமாக கடும் முதுகுவலியால் அவதிப்பட்டுவரும் சியோலின், அண்மையில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஸ்கேன் பரிசோதனையின் போது இவருக்கு 4 சிறுநீரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது ஒருவகை நோய் என்றே இது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1,500 பேரில் ஒருவருக்குத்தான் இதனால் மரணம் ஏற்படும் என்றும், சிலருக்கு இத்தகைய நோய் இருப்பது தெரியாமலேயே முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்துள்ளனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



ஆனால், இந்த கூடுதல் சிறுநீரகங்களால் எந்த வித பயனுமில்லை. ஏற்கெனவே செயலில் இருக்கும் சிறுநீரகங்களுடன் இவை தொடர்புபட்டிருப்பதால் இவற்றை அகற்றி சிறுநீரகம் பழுதடைந்தவர்களுக்குப் பொருத்தும் வாய்ப்பு அரிதே.

என்றாலும் அதனை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
இந்த முயற்சியின் போது பிளாடரையும், சிறுநீரகத்தையும் இணைக்கும் குழாய் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சியோலினின் கூடுதல் சிறுநீரகங்களை அகற்றியுள்ளனர்.

தற்போது சியோலினின் உடல் நிலை நன்றாகத் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.