வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா..!

1339

 
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா  எதிர்வரும் 11-06-2016(சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அன்றைய தினம் இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள்,  மற்றும் இலங்கையின் முன்னணி பாடகர்கள் கலந்து சிறப்பிக்கும் எம்.சிவகுமாரின் அக்னி இசைக்குழுவின் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

NARA