சிறகிழந்த பறவைகள்..!!

1413

13219728_1090106091030974_2053662876_n

எதிரி சண்டையிட்டும் வீழ்த்த முடியாத
கர்வம் மிகுந்த வீரப் பறவைகள்.
வேடன் இட்ட சதி வலையில்,
சிறகுகள் வெட்டப்பட்டு
வேடன் வகுத்த தனி வழியில்
குவியல் குவியலாக
இறக்கை வேறு உடல் வேறு
முண்டம் வேறு பிண்டம் வேறாக
பாதை எங்கும் கண் பெற்ற பாவமாக காட்சிகள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உடலோடு உயிர் மோதி துடிக்கும் வலியை
அணுவணுவாக அனுபவத்தபடி, தன்
உயிர் விட்டு விடும் இறுதி வழியும் தெரியாமல்
தன் இரண்டு குஞ்சுகளும் தன் கண் முன்னே தொலையக்கண்டு
பதறி துடித்து கதறி அழுதும் ஆறுதல் இன்றி
நட்பும் பறவையும் நன்றிப் பறவையும் தம் நினைவற்றுப் போக
துரோகம் தந்த வலியோடு புதைக்கப்படாத
உடலோடு உயிர் வேண்டா வலியோடு
இன்னும் கூண்டுகளில்..

-குமுதினி ரமணன்-