4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற கொடூர தாய்!!

441

1362952_Wallpaper1

மேற்கு வங்கத்தில் பெண்மணி ஒருவர் தனது 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரமிளா மோண்டல் (42) என்ற பெண்ணுக்கு 4 வயதில் பாரதி என்ற மகள் இருக்கிறாள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நேற்று முன்தினம் பாரதியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரமிளாவின் மைத்துனர் தப்லு மோண்டல் அங்கு சென்றுள்ளார். அப்போது பிரமிளா தனது மகளின் தலைப் பகுதியில் தோலை அறுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தப்லுவும் அவரது மனைவியும், தலையில் ரத்தம் வழிந்த பாரதியை மீட்டு, மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த தகவல் அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள் பிரமிளாவை கட்டி வைத்து அடித்துள்ளனர். நடந்த சம்பவத்தை ஒப்புக் கொண்ட பிரமிளா அதற்கான காரணத்தை சொல்லவில்லை.



5 குழந்தைகளுக்கு தாயான பிரமிளா போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று கிராமவாசிகள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே கிராம மக்களால் கட்டி வைக்கப்பட்ட பிரமிளாவை மீட்ட பொலிசார் கூறுகையில், பிரமிளாவிடம் விசாரித்து வருகிறோம். இதுவரை அவர் மீது வழக்கு பதியவில்லை என தெரிவித்துள்ளனர்.மேலும், பிரமிளாவின் கணவர் ஹபு மோண்டல் கூலிவேலை செய்வதற்காக ஓராண்டுக்கு முன் டெல்லி சென்றதாகவும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.