விசித்திர நோயை கட்டுடல் மூலம் விரட்டியடித்த பெண்!!

444

fitness-gym-wallpapergym-girl-fitness-blog-health-tips-fitness-or-health-guide-3

பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்டிருந்த போபியாவை உடற்பயிற்சியின் மூலம் விரட்டியடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் Cheshire, Northwich பகுதியை சேர்ந்தவர் லாரென் லிவின். சிறுவயது முதலேயே உணவு பதார்த்தங்களை பார்த்தால் பயப்படும் போபியா இவருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இறைச்சி, பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட்டது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த போபியாவால் நீரை கூட அருந்த முடியாமல் அவர் தவித்து வந்தார். தனது உணவாக பிரட், நொறுக்கு தீனி போன்றவற்றையே லாரென் எடுத்து வந்தார். இந்நிலையில் உடலில் போதிய சத்து இல்லாததால் கல்லூரி காலங்களில் அவருக்கு தீராத தலைவலி ஏற்பட்டது.

மேலும் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் தூங்கி வழிந்துள்ளார். இந்நிலையில் உடற்பயிற்சி மீது ஏற்பட்ட திடீர் ஆர்வம் அவரது வாழ்க்கையையே திசை மாற்றியது. உடற்பயிற்சியாளரான அவரது ஆண் நண்பர் அலெஸ் மோசஸ் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு லாரெனுக்கு உற்சாகம் அளித்து வந்தார்.



தீவிர உடற்பயிற்சி மூலம் உணவு வகைகள் பார்த்து பயப்படும் அவரது போபியா படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. தற்போது அவர் இறைச்சி, காய்கறிகள், மீன் வகைகள் போன்றவற்றை எளிதாக உட்கொள்கிறார். எனினும் நீரைஅருந்துவதற்கு அவர் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதால் பழச்சாறுகளை மட்டும் அருந்தி வருகிறார்.