70 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை திருமணம் செய்த காதலன்!!

442

old-couple-together

இங்கிலாந்தை சேர்ந்தவர் ராய் விக்கர்மேன் (90). இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஆவார். கடந்த 1940-ம் ஆண்டு பள்ளியில் படித்த போது நோரா ஜாக்சன் என்ற பெண்ணை சந்தித்தார். தற்போது இவருக்கு 89 வயது ஆகிறது. இருவரும் காதலித்தனர். 1946-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அந்த நேரம் இரண்டாம் உலகப் போர் அறிவிக்கப்பட்டது. எனவே, விக்கர்மேன் போருக்கு சென்று விட்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

போரில் அவர் படுகாயம் அடைந்தார். அதற்காக சிகிச்சை பெற்ற அவர் மன உளைச்சல் அடைந்தார். எனவே திருமண எண்ணத்தை மறந்த அவர் நோரா ஜாக்சனை பிரிந்தார். அதை தொடர்ந்து நோரா ஜாக்சனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. தற்போது அவரது கணவர் இறந்து விட்டதால் விதவையாக உள்ளார். இதற்கிடையே மன அழுத்தத்தில் இருந்து குணமான விக்கர்மேன் நோராவை தொடர்ந்து காதலித்து வந்தார். அவரை சந்திக்க பல வருடங்களாக தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை.

திருமண நிச்சயதார்த்தம் நடந்து 70 ஆண்டு கடந்த நிலையில் சமீபத்தில் ஒரு ரேடியோ நிகழச்சியில் பங்கேற்ற அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது தனது காதல் கதையை கூறினார். அதைக் கேட்ட நோரா ஜாக்சன் விக்கர்மேனை சந்தித்தார். அவர்கள் இருவரும் தற்போதும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை உணர்ந்தனர். எனவே இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டனர்.