உத்தரப்பிரதேசத்தில் சிட்டுக்குருவிக்கும், சிட்டுக்குருவிக்கும் நடந்த திருமணத்தில் சுமார் 500 கிராமவாசிகள் கலந்து கொண்டுள்ளனர். சர்வதேச சிட்டுக்குருவி தினம் வரும் 20-ம் திகதி கொண்டாடப்படும் நிலையில் அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுக்காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த திருமணம் செய்யப்பட்டுள்ளது.
மோஹன்பூர் கலாரி கிராமத்தைச் சேர்ந்த யஷ்வந்த் பட்டேல்-சுமன்லதா தம்பதியர், இந்த சிட்டுக்குருவி திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியுள்ளனர்.மாப்பிள்ளை சிட்டுக்குருவியை வளர்த்துவரும் உள்ளூர் ஆசிரியரிடம் பெண் சிட்டுக்குருவியை யஷ்வந்த் பட்டேல் தாரைவார்த்துள்ளார்.
சுமார் 500 கிராமவாசிகள் கலந்து கொண்ட இந்த திருமணத்தில், விருந்து நிகழ்ச்சியும் நடந்துள்ளது.மேலும், இந்த திருமண விழாவில் மாவட்ட வனத்துறையை சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.