அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு தந்தைகள் இருப்பது மூன்று வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த T.M என்பவர் தன்னை பிரிந்து சென்ற காதலர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
T.M-க்கு மூன்று வருடங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தை பிறந்தது. அதன் பிறகு இவரின் காதலர் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டார். தற்போது இவரின் காதலரிடம் இருந்து இவரின் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வேண்டுமெனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக இரட்டைக் குழந்தைகளுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதில் இருகுழந்தைகளுக்கும் வேறுவேறு தந்தை என்று தெரியவந்துள்ளது. இதன் பின்னர், தான் தனது காதலருடன் உடலுறவு கொண்ட மறுவாரம் வேறொருவருடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார் T.M.
இதனால், அவரின் காதலருக்கு ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் வாரம் ரூ.2,000 ஜீவனாம்சம் கொடுத்தால் போதுமானது என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது போன்று தொடர்ந்து ஒரு வார இடைவெளியில் ஒரு பெண் இருவேறு ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் போது, இரட்டைக் குழந்தை பிறக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்றும். இது 10லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.