இங்கிலாந்து வனவிலங்கு காப்பகத்தில் சிசேரியன் மூலம் பிறந்த குட்டி கொரில்லா!!

427

6733faaf-b2f9-4991-af3b-eb261620f3c4_S_secvpf-1-300x225

தென்மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கேரா என்ற பெண் கொரில்லா குரங்கு சமீபத்தில் கருத்தரித்தது. பிரசவ காலம் நெருங்கும் வேளையில் அப் பெண் கொரில்லா தனது கருப்பையில் வளர்ந்து வந்த குட்டியை இயற்கை முறையில் ஈன்றெடுக்க முடியாத நிலையில் அவதிப்படுவதை கண்டு அங்கிருந்த பணியாளர்கள் கவலையடைந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உடனடியாக விலங்குகளுக்கு பிரசவம் பார்க்கும் மகப்பேற்று நிபுணர் டேவிட் காஹில் என்பவர் அங்கு வரவழைக்கப்பட்டார். சிசேரியன் ஆபரேசன் மூலம் கேராவின் வயிற்றில் இருந்து குட்டி கொரில்லா எடுக்கப்பட்டது. தற்போது குட்டி கொரில்லா ஆரோக்கியமாக உள்ளது.