பெண்ணின் நாய் பாசத்தால் தாய் பாசத்தை இழந்த பையன்.!!

882

motherlike_dog

பிரித்தானியாவை சேர்ந்த தாயார் ஒருவர் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில், தனது மகனை விட நாயை தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த கெல்லி ரோஸ் (41) என்ற பெண்மணி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான திஸ் மார்னிங் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார். இவர் தனது 11 வயது மகனான வில்லியமை விட தனது நாயை தான் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது, நாய்கள் எந்த நேரத்திலும் மாறாதது என்றும் ,ஆனால் சிறுவர்கள் மாறி விடுவதால் தனக்கு நாயை தான் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.மேலும் அவரின் மகனும் இது போன்று தான் நினைப்பதாக கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியது மக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.