ஆணாக மாறிய அழகுராணி – நம்பினால் நம்புங்கள்!!

424

competing-in-a-pageant

அமெரிக்காவைச் சேர்ந்த அழகுராணியொருவர், ஆணாக மாறியுள்ளார். பெண்கள் ஆணாக மாறுவதும் ஆண்கள் பெண்களாக மாறுவதும் மேற்குலக நாடுகளில் அவ்வளவு அரிதான விடயமல்ல. ஆனால், இவ்வாறு பால் மாற்றம் செய்பவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே தாம் சார்ந்த பாலினத்தைவிட எதிர்பாலாரைப் போன்று நடையுடை பாவனைகளில் ஈடுபடுவதற்கே ஆர்வம் காட்டுவர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

எனினும், அஷ்டன் கொல்பி எனும் இந்த யுவதி அழகுராணி போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டும் அளவுக்கு பெண் தன்மையானவராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. மிஸ் அமெரிக்கா அழகுராணியாக தெரிவாகக்கூடிய வாய்ப்பை புறக்கணித்துவிட்டு ஆணாக மாறியுள்ளார் 23 வயதான அஷ்டன் கொல்பி. அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த அஷ்டன் கொல்பி, 17 வயதில் உள்ளூர் அழகுராணி போட்டியொன்றில் பங்குபற்றினார்.

அடுத்த இரு வருடங்களில் அவர் 7 அழகுராணி போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றிகளைப் பெற்றார். மிஸ் டீன் கொலம்பஸ் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்றார். மிஸ் ஒஹையோ அழகுராணி போட்டியிலும் அவர் பங்குபற்றினார். ஆனால், பின்னர் ஆணாக மாறுவதற்குத் தீர்மானித்து ஆண்களுக்கான டெஸ்டொஸ்டெரோன் ஹோர்மனை பயன்படுத்தத் தொடங்கினார்.”இறுதியாக நான் மிஸ் ஒஹையோ அழகுராணி போட்டியில் பங்குபற்றினேன். அது மிஸ் அமெரிக்கா போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பையும் அளித்திருக்கக்கூடும்.



ஆனால் மிஸ் ஒஹையோ போட்டிக்காக நான் மேடையில் நின்றபோது, அசௌகரியமாக உணர்ந்தேன். அந்நிகழ்வில் பங்குபற்றுவது எனக்கு சிரமமாக இருந்தது. அப்போட்டியின் பின்னர் நான் கண்ணீர் விட்டு அழுதேன். 2012 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நான் ஆணாக வாழத் தொடங்கினேன்” அஸ்டன் கொல்பி. அழகான யுவதியாக வாழும் வாழ்க்கையை கைவிட்டு அவர் ஏன் ஆணாக மாற விரும்பினார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் அஸ்டனின் குடும்பத்தினரும் நண்பர்களும் வியப்படைந்தனராம்.

“அழகுராணி போட்டிகளில் நான் பெற்ற வெற்றிகள் எல்லாம் வீணாகிவிட்டன என்பதும் எனது தாயாரை கடுமையாக பாதித்தது. பல மாதங்கள் அவர் என்னுடன் பேசவில்லை. ஆனால், எனது தந்தை ஆதரவாக இருந்தார். பின்னர் தாயும் சமாதானமானார்” எனக்கூறும் அஸ்டன் கொல்பி, மார்பகங்களையும் சத்திரசிகிச்சைகள் மூலம் அகற்றிக்கொண்டார்.
இச்சத்திரசிகிச்சைக்காகவும் ஹோமோன்களுக்காகவும் அவர் 10 இலட்சம் ரூபாவுக்கு மேல் செலவிட்டுள்ளார். தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் அஸ்டன் கொல்பிக்கு தற்போது ஒரு காதலியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.