ஆசிரியை காதலை நிராகரித்ததால் நிர்வாணமாக வீதியில் உருண்ட மாணவர்!!

439

313BA45100000578-3447535-image-a-2_1455535620859

காதலர் தினத்தையொட்டி ஆசிரியை ஒருவரிடம் தனது காதலைத் தெரிவித்து நிராகரிப்புக்குள்ளான பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடுவீதியில் அரை மணி நிர்வாணமாக உருண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு சீனாவில் ஜினான் நகரிலுள்ள வாங்குவான்ஸுவாங் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அந்த நபர் பல்கலைகி்கழகத்தில் நான்காம் வருடத்தில் கற்கையை மேற்கொண்டு வரும் மாணவர் என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார்,பெரும் சிரமத்தை எதிர்கொண்டு அங்கிருந்து அவரை வெளியேற்றியுள்ளனர்.

“மேற்படி மாணவரின் செயற்பாடு பல்கலைக்கழக மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கையாக தோன்றவில்லை. அவரது செயற்பாடு பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவரை விடவும் முதிர்ச்சி குறைந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக உள்ளது. அவரது காதலை குறிப்பிட்ட ஆசிரியை நிராகரிக்க எடுத்த முடிவு சரியானது” என பலரும் விமர்சித்துள்ளதாக பிராந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.