ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாத அரசு ஊழியர்: பெரும் தொகை அபராதம் விதித்த நிர்வாகம்!!

440

boss-you-hate_featured

ஸ்பெயின் நாட்டில் அரசு ஊழியர் ஒருவர் ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாததை கண்டறிந்த நிர்வாகம் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளது.ஸ்பெயின் நாட்டில் உள்ள காடிஸ் பகுதியில் பொது விநியோகத்துறையில் பணியாற்றி வந்தவர் Joaquin Garcia.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 37,000 யூரோ ஆண்டு வருவாய் என முடிவு செய்து இவருக்கு இந்த பொறுப்பை வழங்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற விருதுக்கு பரிந்துரைத்த நிர்வாகம் இவர் குறித்து கூடுதல் தகவல்களை சேகரித்துள்ளது.அப்போது இவர் தமது அலுவலகத்திற்கு வந்து 6 ஆண்டுகள் ஆனதாக தெரியவந்தது அங்குள்ள சக அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதனையடுத்து கார்சியா மீது வழக்கு தொடுத்த நிர்வாகம் இறுதியில் அவரிடம் இருந்து 27,000 யூரோ அபராதமாக ஈடாக்க முடிவு செய்துள்ளது.அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கார்சியா, தாம் தினசரி அலுவலகம் வந்துள்ளதாகவும், குறிப்பிடத்தக்க பணி எதுவும் அங்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தமக்கு பெரிய குடும்பம் என்றும் வேலையை விட்டு நீக்கினால் வேறு வேலை தேடுவது கடினம் எனவும் தெரிவித்துள்ளார்.தற்போது 69 வயதான கார்சியா ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளதால் பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டுள்ளனர்.