சமையல் செய்ய தெரியாத மனைவி மீது வழக்கு போட்ட கணவன்: 6 ஆண்டுகள் சிறை!!

439

cleaning_case_002

வீட்டு வேலைகளை சரியாக செய்யாத மனைவிக்கு தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள கணவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலி நாட்டை சேர்ந்த Daniela Del என்பவர் Turin பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர், இத்தாலி நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில், எனது மனைவி Sonnino – விற்கு வீட்டு நிர்வாகத்தை சரியாக பராமரிக்க தெரியவில்லை.அவளது மோசமான நிர்வாகத்தால் கடந்த 2 ஆண்டுகளாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன், வீட்டு தேவைகளுக்காக வாங்கி வைத்திருக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் விட்டு விடுவதால் அவை இறுதியில் குப்பையில் போடப்படுகின்றன.

வீட்டில் சமையல் செய்வது கிடையாது, வீட்டினை சுத்தம் செய்வது கிடையாது, இவள் செய்யும் இந்த செயல்கள் என்னை அவமதிப்பதாகவே உள்ளது.மேலும், படுக்கை அறையை விட்டு துரத்தியதோடு மட்டுமல்லாமல், மோசமான சுகாதார நிலமையில் வாழ்வதற்கு என்னை கட்டாயப்படுத்தியுள்ளார் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார்.



இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், அப்பெண்ணின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.