தனியொருவருக்காக சேவை நடத்திய விமான நிறுவனம்: சுற்றுலா பயணிக்கு வாய்த்த அதிர்ஷ்டம்!!

548

only_passenger_002

ஒரே ஒரு பயணிக்காக பிலிப்பைன்ஸ் விமான சேவை நிறுவனம் பயணத்தை தொடர்ந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஆஸ்திரியா நாட்டின் பயண கட்டுரை எழுத்தாளரான 28 வயது அலெக்ஸ் சைமன் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுலா சென்றுள்ளார்.தலைநகர் மணிலாவில் தங்கியிருந்த அவர் அங்கிருந்து 315 கிலோ மீட்டர் தென் பகுதியில் அமைந்துள்ள Boracay தீவுக்கு செல்ல விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சம்பவத்தன்று விமான நிலையம் வந்த அவருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருந்தது, அவர் மட்டுமே பயணத்திற்காக பதிவு செய்துள்ளதால் காத்திருக்க தேவை இல்லை எனவும் உடனடியாக பயணத்தை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.குதூகலமான இந்த செய்தி கேட்டு ஆனந்தமடைந்த அலெக்ஸ், 2 விமானிகள் மற்றும் சில ஊழியர்களுடன் தனியொருவராக பயணம் செய்துள்ளார்.

விமானி மற்றும் விமான ஊழியர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட அவர் தனது அனுபவத்தை 3 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோ பதிவாக சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.