நெருப்பு பற்றிக்கொண்ட பின்னும் அசராமல் தூங்கிய நபர் : கூச்சலிட்டு கதறிய பொதுமக்கள்!! (வீடியோ இணைப்பு)

452

humen_combustion_003

செர்பியாவில் சாலையோரத்தில் படுத்திருந்த நபர் ஒருவர் மீது திடீரென்று நெருப்பு பற்றிக்கொண்டதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டு கதறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செர்பியாவின் நோவி சேட் நகரில் மிதிவண்டி கடை ஒன்றின் முன்பு வீடிழந்த நபர் ஒருவர் இரவை கழிக்கும் பொருட்டு படுத்து தூங்கியுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அப்போது அவரது மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் திடீரென்று நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.ஆனால் அந்த நபர் ஏதொரு சலனமும் இன்றி கண்ணயர்ந்து தூங்கியுள்ளதாக கூறப்படுகிறது.கடை வாசல் முன்பு படுத்திருந்தவர் மீது திடீரென நெருப்பு கொழுந்து விட்டு எரிவதைக் கண்ட அப்பகுதி வழியே கடந்து சென்றவர்கள் கூச்சலிட்டு கதறியுள்ளனர்.

அந்த நபர் மீது படர்ந்திருந்த நெருப்பை அணைக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர்.இந்த களேபரங்களில் தூக்கம் கலைந்து எழுந்த நபர் தம் மீது பற்றி எரிந்த நெருப்பை தட்டிவிட முயன்றுள்ளார்.கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பால் அந்த மனிதருக்கு சொல்லும்படியான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.



நோவி சேட் பகுதியில் இந்த மனிதர் பரிச்சயமானவர் என கூறப்படுகிறது, இவரது உடலில் இதுபோன்று அடிக்கடி நெருப்பு கொழுந்து விட்டு எரிவதை பொது மக்கள் பார்த்துள்ளனர்.இதுபோன்று திடீரென உடல் பற்றிக்கொள்ளும் நிலையில் உலகமெங்கும் 200 நபர்கள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.நெருப்பு உடலில் பற்றிக்கொள்வதால் தீவிரமான காயங்கள் இவர்களுக்கு ஏற்படுவதில்லை எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.