மனைவியின் மூக்கை துண்டித்த கணவன்- சிறுமியுடன் மறுமணம்!!

586

afkan_girl_002

தனது மனைவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்து அவரது மூக்கை கணவர் ஒருவர் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வட மேற்கு மாகாணமான பர்யாப்பைச் சேர்ந்த ரெஸா கல் (தற்போது 20 வயது) என்ற மேற்படி பெண் 5 வருடங்களுக்கு முன்னர் தனது 15 ஆவது வயதில் திருமண பந்தத்தில் இணைந்திருந்தார். இந்நிலையில் தொழில் நிமித்தம் ஈரான் சென்று அண்மையில் வீடு திரும்பியிருந்த அவரது கணவர் அஹ்மெட் ஜாவத் பெடார், அவரை அடித்து உதைத்து சித்திரவதை செய்ய ஆரம்பித்தார்.

அத்துடன் அவர் புதிதாக மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்காக 7 வயதான மணப்பெண் ஒருவரையும் தேடிக் கொண்டதாக தெரிவிக்கப்படகிறது. இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மனைவியின் மூக்கை தனது சட்டைப்பையில் வைத்திருந்த கத்தியால் வெட்டித் துண்டித்துள்ளார். இதனையடுத்து ரெஸா கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது தனது மூக்கை மீள செயற்கையாக கட்டமைப்பதற்கான அறுவைச் சிகிச்சையொன்றுக்கு உட்பட வேண்டிய தேவைப்பாட்டை எதிர்கொண்டுள்ளார்.



இந்நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்துக்கு தப்பிச் சென்றுள்ள அஹ்மெட் ஜாவத் பெடாரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். தனது மனைவியின் மூக்கைத் துண்டிப்பதற்கு முன் அஹ்மெட் ஜாவத் பெடார் தனது மனைவியை துன்புறுத்துவதை நிறுத்துவதாக ஊர் பெரியவர்களிடம் வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவருக்கும் ரெஸா கல்லுக்கும் ஒரு வயது குழந்தையொன்று உள்ளது.அஹ்மெட் ஜாவத் பெடார் எதற்காக தனது மனைவியை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தினார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.