அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இரட்டைக் குழந்தைகள் வெவ்வேறு வருடங்களில் பிறந்துள்ளனர்.கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான மேர்பேல் வலேன்சியா எனும் பெண்ணுக்கு கடந்த வாரம் இரட்டைக் குழந்தை பிறந்தன.
இதில் பெண் குழந்தை கடந்த வருடத்தின் இறுதித் தருணத்தில், அதாவது 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு 11.59 மணிக்குப் பிறந்துள்ளது.இதேவேளை, மற்றைய குழந்தையான ஆண் குழந்தை இவ் வருடம் 2016 ஜனவரி மாதம் முதலாம் திகதி 00.02 மணிக்குப் பிறந்துள்ளது.
3 நிமிட இடைவெளியில் இரு குழந்தைகளும் பிறந்தால் இரு வேறு வருடங்களில் பிறந்த அதிசயக் குழந்தைகளாக உள்ளன. இவ்விரு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்குழந்தைகளை ஜனவரி மாதம் 6 ஆம் திகதி சிசேரியன் முறையில் பிரசவிப்பதற்கு மருத்துவர்கள் தீர்மானித்திருந்தனர். ஆனால், இக்குழந்தைகள் அதற்கு முன்பாகவே இயற்கைப் பிரசவம் மூலம் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.