40 வருடங்களாக சிரிக்காத விசித்திர பெண்!!

445

big

பிரிட்டனை சேர்ந்த 50 வயதான டெஸ் கிறிஸ்டியன் என்ற பெண் கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்கவே இல்லையாம். சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும் என்பதால் சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் ”பத்து வயதிலேயே எனக்கு அந்த உண்மை தெரியவந்தது. நான் படித்த பாடசாலையில் முகத்துக்கு க்ரீம்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அழகைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சிரிப்பதால்தான் முகத்தில் சுருக்கம் தோன்றி வயதான தோற்றம் வருகிறது. அதனால் சிரிப்பதை விட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார். தற்போது 50 வயதாகியும் இளமையாக இருப்பதற்கு சிரிக்காமல் இருந்ததே காரணம்” என்றுதெரிவித்துள்ளார்.