பேயை விரட்ட நாயை திருமணம் செய்த பெண்!!

892

1409742704793_wps_49_JHARKHAND_INDIA_AUGUST_30இந்தியாவில் 18 வயதுடைய மங்லின் மன்டா என்ற பெண்ணிற்கு விசித்திரமாக நாயை திருமணம் செய்து வைத்துள்ளனர் அவர்களது குடும்பத்தினர். குறிப்பிட்ட பெண் பேய் பிடித்திருப்பதாக குடும்பத்தினரும் கிராமத்தவரும் நம்புகின்றனர். அதனால் அவளுக்கு நாயை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். நாயை திருமணம் செய்து வைத்தால் அவளுக்கு பிடித்திருக்கும் பேய் விலகிவிடும் என நம்புகின்றனர்.

தனக்கு இத்திருமணத்தில் எவ்வித விருப்பமும் இல்லை எனவும் நாயை திருமணம் செய்த பிறகு தனது எதிர்கால வாழ்க்கை துணையை தேடி மீண்டும் திருமணம் செய்ய போவதான மங்லின் மன்டா குறிப்பிடுகின்றார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவ்வாறு நடைபெறும் விசித்திர திருமணங்கள் மங்லின் மன்டாவிற்கு மட்டுமல்ல இக்கிராமத்தில் வசிக்கும் ஏனைய பெண்களுக்கும் நடைபெறுவதாக இவர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு திருமணம் செய்தபிறகு இவர்களை ஒட்டியிருந்த பேய் அகன்றுவிடுவதாகவும் நல்ல வாழ்க்கை அமைவதாகவும் இவர்கள் நம்புகின்றனர்.