தொட்டால் தோல் உரியும் வினோத குழந்தை : கவலையில் பெற்றோர்!

568

BB3அமெரிக்காவில் பிறந்த மூன்று மாத குழந்தை ஒன்று, தொட்டாலே உடலில் தோலுரிருந்து கொப்புளங்கள் ஏற்படும் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லிங்கன் நகரில் வசிக்கும் ஜாசன்-கிறிஸ்டி என்ற தம்பதியினருக்கு கடந்த அக்டோபர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கீரா கிங்கிள் (Kiira Kinkle) என பெயரப்பட்ட இக்குழந்தை, dystrophic epidermolysis bullosa என்ற அரிய நோயால் அவதிக்குள்ளாகியுள்ளது.

இதனால் குழந்தையை பெற்றோர் கொஞ்சி அணைக்க முடியாத நிலையில் உள்ளனர். ஏனெனில் குழந்தைகயை கையினால் தொட்டாலோ அல்லது அணைத்தாலோ உடனே உடலெங்கும் தோலுரிந்து கொப்புளங்கள் தோன்றி விடுகின்றன. இதனால் குழந்தைக்கு அதிக வலி ஏற்பட்டு அழ தொடங்குகிறது. மேலும் இந்த நோய்க்கு இன்னும் சிகிச்சை கண்டுபிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890