பிரபல ஜோர்ஜிய பிரித்தானிய பாடகியான கெதி மெலுவாவின் (Katie Melua) (30 வயது) காதில் ஒரு வார காலமாக சிலந்தியொன்று வாழ்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் பாடலைப்பாடும் போது அணியும் காதணி உபகரணம் மூலமே மேற்படி சிலந்தி மெலுவாவின் காதுக்குள் நுழைந்துள்ளது. அவர் காதில் நமைச்சல் மற்றும் இரைச்சலால் ஒரு வார காலமாக துன்பப்பட நேர்ந்தது.
இந்நிலையில் மருத்துவ உதவியை அவர் நாடிய போது அவரது காதில் சிலந்தியொன்று வாழ்வது கண்டறியப்பட்டது. மருத்துவர்களால் அகற்றப்பட்ட சிலந்தியை சோதனைக் குழாயில் எடுத்து வந்த மெலுவா அதனை தனது தோட்டத்தில் விடுவித்துள்ளார். மெலுவா முன்பு ஸ்பைடர் வெப் (சிலந்தி வலை) என்றழைக்கப்படும் பாடலொன்றை பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது