போதையில் மயங்கிக் கிடந்த நபரின் முகத்தில் டாட்டூ வரைந்த நபர்கள்!!

467

amazing-seithyulagam-news

பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் மதுபோதையில் மயங்கிக்கிடந்தபோது மூக்குக் கண்ணாடி போன்று பச்சை குத்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இவர் இரு வருடங்களுக்கு முன் உல்லாசப் பயணமொன்றை மேற்கொண்டு பிளக்பூல் நகருக்குச் சென்றிருந்தபோது விருந்து நிகழ்வொன்றில் பங்குபற்றினார். அங்கு மதுபானம் அருந்தியபின் மயக்கமடைந்தார். பின்னர் விழித்தெழுந்து கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தபோது, தனது முகத்தில் மூக்குக் கண்ணாடி வரையப்பட்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

விருந்தில் கலந்துகொண்ட தனது நண்பர்கள் சிலர் “மார்க்கர் பென்” மூலம் மூக்கு கண்ணாடியை வரைந்திருக்கிறார்கள் என அவர் முதலில் எண்ணினாராம். அதை அழிக்க முயன்றபோது, அவர் தோல்வியுற்றார். அதன்பின், மூக்குக் கண்ணாடி போன்று பச்சை (டாட்டூ) குத்தப்பட்டிருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். அதையடுத்து பல தடவைகள் லேசர் மற்றும் அழகு சிகிச்சைகளை மேற்கொண்டதன் மூலம் இரு வருடங்களின்பின் அந்த டாட்டூவை அவர் அழித்துக்கொண்டுள்ளார்.