உலகில் தமது அழகை மேம்படுத்த பலரும் அழகு சத்திர சிகிச்சை செய்து கொள்வது வழமை. ஆனால் பிரித்தானிய பிறிஸ்டல் பிராந்தியத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது முகத்தை கிளி போன்ற உருவமுடையதாக மாற்ற தனது காதுகளை 6 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் துண்டித்துக் கொண்டதுடன் தனது மூக்கையும் கிளியின் சொண்டு போன்று மாற்றுவதற்கு சத்திரசிகிச்சை செய்து கொள்ளவுள்ளார்.
ரெட் றிச்சர்ட்ஸ் (56 வயது) என்ற மேற்படி நபர் தனது உடலில் 110 பச்சை குத்தல்களை மேற்கொண்டுள்ளதுடன் 50 துளைகளையும் இட்டுள்ளார். அத்துடன் அவர் தனது நாக்கையும் துண்டித்துள்ளார்.
அவர் எல்லி, தியகா, ஜேக், திமெனெக், பபி ஆகிய பெயர்களையுடைய கிளிகளை வளர்த்து வருகிறார்.
கடந்த பல வருட காலமாக தான் கிளி போன்ற தோற்றத்தில் காட்சியளிக்க நீண்ட கேசத்தை வளர்த்து தனது காதுகளை மறைத்து வந்ததாக ரெட் றிச்சர்ட்ஸ் கூறினார்.