பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பெண்: 20 வருடங்களாய் தொடரும் பழக்கம்!! (வீடியோ இணைப்பு)

531

emma_sponge_002

சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்திற்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார்.பிரித்தானியாவின் Wallsend பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான Emma Thompson நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து சாப்பிடுகிறார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தமது 3 வயதில் குளியலறை பஞ்சை முதன் முறையாக சுவைத்து பார்த்த Emma அதைத் தொடர்ந்து சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சை சாப்பிட துவங்கியுள்ளார். Pica எனப்படும் ஒருவித நோயால் பாதிக்கப்படுபவர்கள் இது போன்று சத்துக்கள் எதுவும் இல்லாத பொருட்களை உணவாக உட்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாத்திரம் துலக்கும் திரவத்தில் ஏற்கனவே ஊறப்போட்டு வைத்திருந்த பஞ்சுகளை காலையில் எழுந்ததும் சாப்பிடுவதால் தமக்கு புது தெம்பு கிடைப்பதாக Emma தெரிவித்திருக்கிறார்.



வாரம் 6 பவுண்டுகள் பஞ்சுக்காகவே தாம் செலவிடுவதாக தெரிவித்துள்ள அவர், சிலர் புகைக்கின்றனர், அதுபோல் தாம் பஞ்சு சாப்பிடுவதாகவும், அது தீய பழக்கம் அல்ல எனவும் Emma வாதிட்டுள்ளார்.

சில நேரம் பஞ்சை அப்படியே முழுங்கி விடுவதாகவும், அல்லது சுவைத்து தின்று விடுவதாகவும் தெரிவித்துள்ள Emma, ஆப்பிள் பழம் போன்று சுவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.