தாலாட்டைக் கேட்டு உறங்கும் 3 வார யானைக்குட்டி! (VIDEO)

583

baby-elephant-sleeping-jpgஇந்த மூன்று வாரக் குழந்தை (யானைக்குட்டி) அவளது நெருங்கிய தோழியான அலய்யின் மடியில் படுத்து, அவள் பாடும் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்குகின்றது.

வாழ்வாதாரமின்றி தவித்த இந்த யானைக்குட்டியின் குடும்பத்தை தற்போதைக்கு தாய்லாந்தின் சாய் லாய் ஆர்க்கிட் என்னும் வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு பாதுகாத்து வருகின்றது. சில தினங்களுக்கு முன் யூடியூபில் வெளியான இந்த வீடியோ லட்சக்கணக்கானோரின் விருப்பமாக அமைந்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தற்போது இந்த குட்டி யானையைக் கவனித்து வரும் இந்த அமைப்பு, இந்த யானைகளின் குடும்பத்துக்கான வாழ்வாதாரமாக சரணாலயம் அமைக்க மக்களின் ஆதரவை நாடி இந்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றது.