ஒருவரின் கை அசைவில் இலத்திரனியல் உபகரணங்களையும் காட்சித் திரைகளிலிருந்து ஸ்மார்ட் ஒளிகள் வரையும் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்மார்ட் மோதிரமொன்று இஸ்ரேலை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் எம்யுவி இன்டரக்டிவ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள் ளது.
‘பேர்ட்’ என்ற மேற்படி மோதிரமானது பயன்பாட்டாளர் எவ்வாறு தனது கையை அசைக்கிறார் என்பதை கிரகித்து அதற்கேற்ப செயற்படக்கூடிய நுண் உணர்கருவிகளைக் கொண்டமைந்துள்ளது.
இது மருத்துவமனைகளில் நோயாளிகளின் குருதி ஒட்சிசன் மட்டங்களையும் இருதயத் துடிப்புகளையும் கண்காணிக்கப் பயன்படும் உபகரணத்தை ஒத்ததாக காணப்படுகிறது.
மேற்படி பேர்ட் உபகரணம் குரல் மற்றும் குரல் அழுத்தம் என்பனவற்றையும் உணரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்த உபகரணம் கம்பியில்லா முறைமை மூலம் தொலைக்காட்சி மற்றும் படத்தை திரையிடும் கருவி என்பவற்றுடன் தொடர்பைக் கொண்டுள்ளது.
இதன்போது பயன்பாட்டாளர் காட்சிப்படுத்தப்படும் காட்சியை தூரத்திலிருந்து கையை அசைப்பதன் .மூலம் விரும்பியவாறு மாற்றவோ சரிசெய்து கொள்ளவோ முடியும்.
அத்துடன் இந்த மோதிரத்தின் மூலம் ஒருவர் தனது வீட்டின் சுவரை இராட்சத காட்சித் திரையாக மாற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.