அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரப் பெண்ணொருவர் தனது கிளி இனத்தைச் சேர்ந்த 32 வளர்ப்புப் பறவைகளுக்கு 100,000 அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்தை எழுதிவைத்து விட்டு இறந்துள்ளார்.
நியூயோர்க் நகரைச் சேர்ந்த லெஸ்லி ஆன் மன்டெல் (69 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தனது வளர்ப்புப் பறவைகள் ஒவ்வொன்றினதும் பெயரைக் குறிப்பிட்டு அவற்றுக்கு பெருமளவு சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார்.
அத்துடன் அந்தப் பறவைகளுக்கு வெவ்வேறு தினங்களில் வழங்கப்பட வேண்டிய விசேட உணவுகள் தொடர்பான விபரங்களும் அந்த உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் அவர் மேற்படி பறவைகளுக்கான நிதியத்தின் காப்பாளராக தனது மகன் முறையான மத்தியூவை பெயர் குறிப்பிட்டுள்ளதுடன் தனது நாயான பொரஸ்றி, பூனையான கிகி என்பற்றைப் பராமரிக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்துள்ளார். லெஸ்லியின் கணவர் பிரபல விஞ்ஞான புனைக்கதை எழுத்தா ளரான ஆர்தர் ஹெர்பேர்க் ஆவார்.