தமிழகம் கோவையிலுள்ள மதுபானக் கடை யில் வாங்கப்பட்ட மதுபானப் போத்தலில் பல்லி கிடந்த சம்பவம் குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் கோவை மாவட்டம் அன்னூர் எல்லப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவுத்தொழிலாளி ஒருவர், மதுபானக் கடை ஒன்றில் கல் போத்தல் அளவிலான மதுபானப் போத்தல் ஒன்றை வாங்கியுள்ளார்.
மதுவைக் குடிப்பதற்காக மூடியை திறந்த அவர், உள்ளே பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, மதுபானக்கடை ஊழியர்களிடம் அவர் முறையிட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் குறித்த மதுபானக் கடை ஊழியர்கள் தெரிவிக்கையில்,
“மது போத்தல்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் போது, அதை அப்படியே எடுத்து மதுவை நிரப்புகிறார்கள்.நீண்ட நாட்களாக குப்பையில் கிடைக்கும் போத்தல்களில் எது இருந்தாலும் அப்படியே மது நிரப்பப்படுகிறது.
போத்தல்களை முறையாக மறு சுழற்சி செய்து பயன்படுத்தாமல் அப்படியே பயன்ப டுத்துவ தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளனர்.