நாயுடன் தப்பிச்சென்று உயிர்பிழைத்த சிறுவன்!!

455

siriya-500x500உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டிலிருந்து அக்கம்பக்கம் உள்ள நாடுகளில், உயிர்வாழ வேண்டி ஓடிவரும் அகதி வாழ்க்கைக்கு நடுவே, குடியேற புகலிடம் தேடி வந்த சிறுவன் தனது செல்ல நாயைப் பிரிய மனமில்லாமல், அதையும் சுமார் ஐநூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கிக் கொண்டு நடைப்பயணமாக வந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளான்.

சிரியாவின் தலைநகர் டாமாஸ்கஸ் நகரத்தைச் சேர்ந்த ஆஸ்லான்(17), கிரீஸ் நாட்டின் தீவான லெஸ்போஸுக்கு வந்தடைந்தபோது, ஐக்கிய நாடுகள் அகதிகள் மறுவாழ்வு குழு அவனை சந்தித்தது. அப்போது, ஆஸ்லான் தன்னுடன் தனது செல்ல நாய் ரோஸுடைய பாஸ்போர்ட்டை காண்பித்து இந்நாட்டில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஒரு சிவப்பு பைக்குள் தனக்கும், தனது செல்ல நாய் ரோஸிக்கும் ஆன உணவு தண்ணீருடன், ஐநூறு கிலோ மீட்டர் தூரப் பயணம் மேற்கொண்ட ஆஸ்லான், தனது நாய் பத்திரமாக கூடவே இருக்கிறது என்கிற உணர்வே தன்னை சோர்வடையாமல் நம்பிக்கையுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள வைத்தது என பெருமிதமாக தெரிவித்தான்.
நமக்கு வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்த அவ்வப்போது யாரேனும் தேவைப்படுவர்! அந்த நம்பிக்கை ஆஸ்லானுக்கு தனது செல்ல நாயிடமிருந்து கிடைத்துள்ளது!