6 அடி நீளமான பேய் மீன் கண்டதுண்டா??

628

1597127570Fishஜப்பானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பிடித்த மீன் ஒன்று, பார்க்க பயங்கரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஜப்பானின் தீவான ஹொக்கைடோவுக்கும், ரஷ்ய கரைக்கும் இடையில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒருவரின் வலையில் சுமார் ஆறடி நீளமான பெரிய மீன் ஒன்று சிக்கியது.

இந்த மீனின் வித்தியாசமான உருவ அமைப்பு, இது மீன்தானா? அல்லது, வேற்றுலக வாசியா? இல்லாவிட்டால், புகுஷிமா அணு உலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட மாற்றமா? என இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோரை பீதியடைய வைத்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இது ‘வொல்ஃப் மீன்´ (Wolffish) வகை எனவும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.இந்த மீனின் அதீத வளர்ச்சிக்கான காரணத்தை தற்போது ஆய்வு செய்து கண்டறியும் முயற்சியில் ஜப்பானிய மீன்வளத்துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.