பாலுமகேந்திராவின் நடிகர் அவதாரம்..!

644

balumahendra_01

 

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்ற அடையாளத்தோடு இயங்கிக் கொண்டிருந்த பாலுமகேந்திரா இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் அவதாரம் எடுக்கின்றார்.

இவர் ஒரு உன்னதக் கலைஞன். நீங்கள் கேட்டவை, அழியாத கோலங்கள், மூடுபனி, ரெட்டை வால் குருவி, வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, வண்ண வண்ணப்பூக்கள், மறுபடியும், அது ஒரு கனாக்காலம் என்று காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த இயக்குநர்.



வீடு, சந்தியா ராகம் என்ற இரு படங்களை மட்டும்தான் என்னால் சமரசம் இல்லாமல் எடுக்க முடிந்தது என்று உண்மையை உரக்க்ச் சொன்னவர்.

“பொன்மேனி உருகுதே” பாடலை மூன்றாம் பிறையில் வைத்தது கூட தேவையில்லாதது என்று தன் படம் குறித்து தானே விமர்சனம் செய்பவர்.

பாலா, ராம், வெற்றிமாறன், சீமான், சீனுராமசாமி, நா.முத்துக்குமார் என்று பல படைப்பாளிகள் உருவாகக் காரணமாக இருந்தவர் இப்போது தலைமுறைகள் படம் இயக்குகிறார்.

சசிகுமார் தயாரிக்கும் இப்படத்தில் பாலுமகேந்திரா இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் அவதாரம் எடுக்கின்றார்.