வவுனியா வாக்கு எண்ணும் நிலையத்தருகே மோதல்..!

731

2015-General-Election-Newsfirst-415x260

வவுனியா மாவட்ட செயலகத்தில் பலத்த இழுபறி நிலைக்கு மத்தியில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் இரண்டு பிரதான கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி ஆதரவாளர்களே இக் கைக்கலப்பிலே ஈடுபட்டதாக தெரியவருகிறது. எனினும் பொலிசாரின் உடனடித் தலையீட்டினை அடுத்து, ஆதரவாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தினால் வாக்கு எண்ணும் பணிகளுக்கு எத்தகைய இடையூறுகளும் ஏற்படவில்லை என்பதோடு, வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து அமைதியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.