இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்பா? இதோ சூப்பரான உடற்பயிற்சி!!

654

fat_reduce_003

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.இடுப்பு பகுதியின் தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது.இடுப்பு பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில், இந்த கொழுப்பானது கரையாமல் அப்படி தங்கி விடும்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதனால் தடித்து மிக அசிங்கமாக காணப்படும், இதுதவிர மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.இந்த பருமனை மிக எளிதான உடற்பயிற்சி செய்வதன் மூலம் சரிசெய்யலாம்.

* ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.



* தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும். இப்படியே தொடர்ந்து 15 தடவைகள் செய்து வந்தால் இடுப்பு பருமனை குறைக்கலாம்.