மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்த புதுமாப்பிள்ளை அதிர்ச்சியில் அலறல்!!

460

fear-of-commitment-afraid

ஓவராக மேக்கப் போடும் பெண்களால், அதிகபட்சமாக ஆண்கள் அழுது புலம்புவதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஒருவருக்கு அது உளவியல் ரீதியான பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கிறதென்றால் அந்த மேக்கப் எந்த அளவுக்கு இருந்திருக்கும், மேக்கப் இல்லாத அந்த முகம் எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஏற்கனவே, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அவரது பெயரைக் குறிப்பிட்டு மேலும் அவரை மேலும் கஷ்டபடுத்தக்கூடாதென்பதால், அவரது பெயர் புது மாப்பிள்ளையாகவே இருக்கட்டும்.

வடக்கு ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த அந்த புது மாப்பிள்ளை, ஊரிலேயே அழகான பெண்ணைத் தேடிப் பிடித்து கல்யாணம் செய்திருக்கிறார். திருமணம் நடந்து அதன் பின்னான சம்பிரதாயங்கள் எல்லாம் சிறப்பாக முடிந்து, அடுத்த நாள் காலை எழுந்த நம் புது மாப்பிள்ளை, அவரது அறைக்குள் நுழைந்து திருட முயற்சித்த பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அலறினார்.



ஆனால், அதுதான் அவரது மனைவி என்று தெரிந்ததும் நெஞ்சில் கைவைத்தபடி, அப்படியே உட்கார்ந்து விட்டார். விசாரித்ததில், கல்யாணத்திற்கு முன்பாகவும், கல்யாண தினத்தன்றும், பெயிண்ட் அடிப்பதுபோன்று ஓவர் மேக்-அப் போட்டுக் கொண்ட அந்தப் பெண், தன்னை அபார அழகியாக காட்டிக் கொண்டது தெரிய வந்தது.

இதனால், தற்போது நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ள அந்த புது மாப்பிள்ளை, நீதிபதியின் முன்பு, தனக்கு ஏற்பட்டுள்ள உளவியல் ரீதியான பாதிப்பிற்காக 20 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு பெற்றுத்தரும்படி கேட்டுள்ளார்.