வானூர்தியில் பறந்து பேயை விரட்டிய பாதிரியார்.. இத்தாலியில் சம்பவம்!!

571

itali-news

இத்தாலியில் வானூர்தில் பறந்து பாதிரியர் ஒருவர் பேயை விரட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. இத்தாலியில் நேப்பின்ஸ் அருகே கேஸ்டெலாமேர் டி ஸ்டாபியா என்ற நகரம் உள்ளது. அங்குள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. புனித தன்மை பாழடிக்கப்பட்டது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவை அனைத்தும் கெட்ட ஆவிகளின் செயல் என மக்கள் பீதி அடைந்தனர். எனவே நகரில் இருந்து பேயை விரட்டியடிக்க திட்டமிட்டனர். அதற்காக பாதிரியார் ஒருவரை அணுகினர். அவர் நகரில் மீது பறந்து பேய் மற்றும் துஷ்ட சக்தி படைத்த ஆவிகளை விரட்ட முடியும் என்றார். உடனே அவருக்கு ஒரு வானூர்தி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அவர் சிலுவையுடன் வானூர்தியில் பறந்து பிரார்த்தனை செய்தார். பேயை விரட்டி அந்த நகரத்துக்கு ஆசி வழங்கினார். அதன் மூலம் தங்களது நகரம் மீண்டும் வளம் பெறும் என அங்கு வாழும் மக்கள் கருதுகின்றனர்.