டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ், ஸ்டான்போர்ட் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த முறை சம்பியன் பட்டம் வென்ற செரீனா முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் இருந்து விலகியது குறித்து செரீனா கருத்து தெரிவிக்கையில்,
‘‘ஸ்டான்போர்ட் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இருந்தாலும்இ நான் என்னுடைய காயத்தில் இருந்து 100 சதவீதம் குணமடைய வேண்டும். என்னுடைய பிடித்தமான தொடரில் இதுவும் ஒன்று. இங்குள்ள ரசிகர்கள் எனக்கு எப்பொழுதும் மிகப்பெரிய ஆதரவாக இருப்பார்கள்.
இதில் கலந்து கொள் ளும் வீரர்கள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த வருடம் இந்த தொட ரில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார். இந்த மாத இறுதியில் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என்று செரீனா எண்ணியிருந்தது குறிப்பிடத்தக்கது.