அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 10 வயது பாடசாலை சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கபட்ட சிறுவனின் தந்தை செய்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று சிறுவனின் வீட்டிற்கு சென்ற சந்தேகநபர் 50 ரூபாவை கொடுத்து தனிமையில் இருந்த சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். இது தொடர்பில் குறித்த சிறுவன் தந்தையிடம் கூறியதை அடுத்தே அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சிறுவன் மருத்துவப் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.