மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாற்பதாம் கொலணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
நாற்பதாம் கொலணி, வம்மியடியுற்று நான்காம் வட்டாரத்தில் உத்தமபுத்திரன் நந்தினி (26வயது) ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பகுதியின் கிராம சேவையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை தனது வீட்டின் ஒரு அறையிலேயே குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.