நவத்தேகம , மொரகாவெவ பிரதேசத்தில் உருவத்தில் பெரிய பச்சோந்தியொன்று பிடிபட்டுள்ளது.சாதாரணமான பச்சோந்தியை விட கண்ணைக் கவரும் வண்ணத்தில் காணப்படும் இது நவத்தேகம, மொரகாவெவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1 1/2 அடி நீளமான , 300 கிராம் நிறைகொண்ட இப் பச்சோந்தி தற்போது பொலிஸாரினால் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.