நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி 2015 அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதற்பரிசு பெறும் கதைக்கு 25,000 ரூபாய்களும் , இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு முறையே 15,000, 10,000 ரூபாய்களும் பரிசாக வழங்கப்படும்.
பாராட்டுப் பெறும் பத்துக் கதைகளுக்கு, தலா 2000 ரூபாய்கள் வழங்கப்படும். போட்டி முடிவு திகதி 15.10.2015. மேலதிக விவரங்கள் அனைத்தையும் முத்தமிழ் அறிவாலய இணையத்தளத்தில் பார்வையிடவும்.
போட்டி நிபந்தனைகள்
1- இலங்கைப் பாடசாலை மாணவர்கள் அனைவரும் இப்போட்டியிற் கலந்து கொள்ளலாம்.
2- கதைகள் மாணவரது கையெழுத்தில் தபால்மூலம் அல்லது மின்னணுப் பிரதிமூலம் அனுப்பப்படவேண்டும். (பதிவுத் தபாலைத் தவிர்க்கவும்)
3- கதைகள் மாணவரது சொந்தப் படைப்பே என்பதைப் பாடசாலை அதிபர் கையெழுத்திட்டு உறுதிப்படுத்த வேண்டும்.
4- போட்டி முடிவு திகதி 15.10.2015. குறித்த திகதிக்குப் பின் எம்மைச் சேரும் கதைகள் போட்டியிற் சேர்க்கப்படமாட்டா! முடிவுகள் முத்தமிழ் அறிவாலய முகநூலிலும் இணையத்தளத்திலும் வெளியிடப்படும்
5- போட்டிக்காக அனுப்பப்படும் சிறுகதைகள் போட்டி முடிவுகள் வெளியாகும் வரை வேறு ஊடகங்களிற் பிரசுரிக்கப்படக்கூடாது. முதற்பரிசு 25,000 ரூபாய், இரண்டாம் பரிசு 15,000 ரூபாய், மூன்றாம் பரிசு 10,000 ரூபாய், மேலதிகமாகத் தெரிவாகும் பத்துக் கதைகளுக்கு தலா 2000 ரூபாய் ஆறுதற் பரிசாக வழங்கப்படும்.
முக்கிய குறிப்பு:- மாணவர்களது தொலைபேசி இலக்கம் பாடசாலை முகவரி, வீட்டு முகவரி என்பன தனியான தாளில் தெளிவாக எழுதப்பட வேண்டும்.