ரவி ஜயவர்த்தன ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக நியமிப்பு?

494

84918_dsc0111இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட சோமரத்ன திஸாநாயக்க பதவி விலகியதை அடுத்து அப்பதவிற்கு ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். சட்டத்தரணியான ரவி ஜயவர்த்தன, முன்னாள் ஹொரண ஐதேக தொகுதி அமைப்பாளராக செயற்பட்டார். ஐதேக தலைமையுடன் இடம்பெற்ற முறுகலை அடுத்து அவர் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றியுள்ள ரவி ஜயவர்த்தன, புதிய அரசாங்கம் பதவியேற்ற பின் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.