மீண்டும் ஆரஞ்சு மிட்டாய் இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி!!

354

vijay-sethupathi-screenshot-iab-trailer-youtubeவிஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இப்படத்தை பிஜூ விஸ்வநாத் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது. இது படக்குழுவினர் மத்தியிலும் பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், பிஜூ விஸ்வநாத் இயக்கும் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை இயக்குனர் பிஜு விஸ்வநாத் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த படத்திற்கான கதை தயாராகிவிட்டதாகவும், விரைவில் தொடங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

விஜய் சேதுபதி தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் ‘இறைவி’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் புதிய படத்திலும், காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.