ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச விமான சாகச நிகழ்ச்சியில் ஹெலிகப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் இன்று சர்வதேச விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் கலந்து கொண்டு சாகசம் நடத்தின. நிகழ்ச்சியின் ஒருபகுதியாக சோவியத் தயாரிப்பான Mi-28 ரக ஹெலிகாப்டர்கள் வானில் சீறிப்பாய்ந்து சாகசம் நடத்தின.
வானவேடிக்கை நிகழ்த்திய நான்கு ஹெலிகப்டர்களில் ஒன்று திடீரென நிலைதடுமாறியது. சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு விமானி உயிருடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோவியத் தயாரிப்பான Mi-28 ஹெலிகப்டர் ரஷ்ய ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டு, ஈராக் மற்றும் கென்யா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.