போலி நாணயத்தாளை வழங்கி மது கொள்வனவு செய்தவர் சிக்கினார்

472

4619506-Sri-Lankan-rupees-1

ஹட்டன் – காசல்ரீ பகுதி மதுபான விற்பனை நிலையத்தில் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கி மது போத்தல்களைக் கொள்வனவு செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஹட்டன் – எபோட்சிலி பகுதியை சேர்ந்த குறித்த நபர் நேற்று (01) மாலை மதுபானம் கொள்வனவு செய்ததன் பின், 5,000 ரூபாய் நாணயத்தாளை விற்பனையாளரிடம் கொடுத்துள்ளார்.

விற்பனையாளர் நாணயத்தாள் போலியானது என இணங்கண்ட பின், சந்தேகநபரை தடுத்து வைத்து ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின் கைது செய்ததோடு போலி நாணயத்தாளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.