படவிழாவில் இயக்குனர் சுசீந்திரனுக்கு புதிய விருது!!

422

suseenthiran_viambu_Tவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பாயும் புலி’. இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். பாண்டியநாடு படத்திற்கு பிறகு விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் பாரிவேந்தர் வெளியிட, கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவா பெற்றுக் கொண்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த விழாவில், இயக்குனர் சுசீந்திரனுக்கு ‘சிறந்த தயாரிப்பாளரின் இயக்குனர்’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஏனென்றால், இயக்குனர் சுசீந்திரன் இப்படத்தை முதலில் 80 நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால், அவர் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே இப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டாராம். இதனாலேயே, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.