முரளிக்குப் பிறகு ஸ்டெய்ன்தான்!!

414

sport-news2_0

பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான 2-ஆவது டெஸ்ட் போட்­டியில் தமிம் இக்பால் விக்­கெட்டை வீழ்த்­திய தென்­னா­பி­ரிக்க வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்­டி­களில் 400-ஆவது விக்­கெட்டைக் கைப்­பற்றி சாதனை புரிந்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

முத்­தையா முர­ளி­தரன் 72 டெஸ்ட்­களில் 400 விக்­கெட்­டு­களை வீழ்த்தி முத­லிடம் வகிக்க, நியூ­ஸி­லாந்தின் முன்னாள் வேகப்­பந்து மேதை ரிச்சர்ட் ஹேட்லி 80 போட்­டி­களில் 400 விக்­கெட்­டு­களைக் கைப்­பற்ற தற்­போது டேல் ஸ்டெய்ன் 80ஆ-வது டெஸ்ட் போட்­டியில் 400ஆ-வது விக்­கெட்டை வீழ்த்தி ஹேட்­லி­யுடன் 2-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்­டுள்ளார்.

அதே போல் டெஸ்ட் கிரிக்­கெட்டில் 400 விக்­கெட்­டு­களைக் கைப்­பற்றும் 13-ஆவது பந்­து­வீச்­சாளர் ஆகிறார் ஸ்டெய்ன். ஷோன் போலாக்­கிற்குப் பிறகு 400 விக்­கெட்­டுகள் மைல்­கல்லை எட்­டிய மற்­றொரு தென்­னா­பி­ரிக்க வீரர் ஸ்டெய்ன்தான். ஸ்டெய்ன் விளை­யா­டிய 79 டெஸ்ட் போட்­டி­களில் தென்­னா­பி­ரிக்கா 61 போட்­டி­களில் வெற்றி பெற்­றுள்­ளது தென்­னா­பி­ரிக்க டெஸ்ட் வெற்­றியில் ஸ்டெய்னின் அப­ரி­த­மான பங்­க­ளிப்பை பறை­சாற்­று­கி­றது.



மற்ற வீரர்­க­ளி­ட­மி­ருந்து டேல் ஸ்டெய்னை பிரித்து வைப்­பது எது என்­பது பற்றி ஆலன் டொனால்ட் கூறிய போது, “அவ­ரது திறமை, வேகம் மற்றும் உறுதி ஆகி­யவை அவரை அனைத்து கால சிறந்த வேகப்­பந்து வீச்­சா­ள­ராக மாற்­றி­யுள்­ளது. அவர் 500 விக்­கெட்­டு­களைக் கைப்­பற்­றுவார் என்று நம்­பு­கிறேன்.

அதுதான் அவர் விரும்­பு­வதும். இதைத்தான் ஸ்டெய்ன் என்னிடமும் கூறினார்” என்றார்.