லண்டன் சர்வதேசத் திரைப்பட விழாவில் மணிரத்னத்துக்கு விருது!!

390

mani-ratnam-hospitalisedஇந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு லண்டன் – இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சாதனையாளர் (ஐகான்) விருது வழங்கப்பட்டது.

பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் அண்மையில் நடைபெற்ற இந்தப் பட விழாவில் மணிரத்னத்தின் “ரோஜா’, “பம்பாய்’, “தில் úஸ’ ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. படங்களின் திரையிடலுக்குப் பிறகு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தனித்தன்மை மிக்க திரைப்படங்களை இயக்கியதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விருதை பெற்ற பின்னர் இயக்குநர் மணிரத்னம் பேசியதாவது:

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த விருதைப் பெறுவதில் பெருமை கொள்கிறேன். லண்டனில் இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவது இந்த நூற்றாண்டின் புதிய அத்தியாயம். தற்போதைய சூழலில் இந்திய சினிமா புதிய பரிமாணங்களைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறது.

இது போன்ற விருதுகள் அடுத்தடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். இந்த விருதை இனி வரும் காலங்களில் திறமை வாய்ந்த இளம் இயக்குநர்கள் பெறுவார்கள் என நம்புகிறேன் என்றார்.